தமிழகம் மின்மிகை மாநிலம் என்பதை எப்படி ஏற்க முடியும்: தமிழிசை காட்டம்
சென்னை: மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்திக்க தமிழக முதல்வர் மறுத்ததால் தமிழகத்திற்கு இழப்பு என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய மின்துறை அமைச்சரை சந்தித்து அதற்கான திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருந்தால் 2 கூடன்குளங்கள் அமைப்பதற்கு ஈடான மின்சாரம் நமக்கு கிடைத்திருக்கும் என்பதை நம்புவீர்களா? மின் தடையில்லாத மாநிலமாக, மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறியிருக்கும் என்பதை நம்புவிர்களா ? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் பல முறை தமிழக முதல்வரை சந்திக்க முயற்சி செய்திருக்கிறேன் முடியவில்லை என்று சொல்லிருக்கிறார்.

மத்திய அரசின் மின் திட்டங்கள் மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பியுஷ் கோயல் தமிழக முதலமைச்சர் சந்திக்க நினைத்தார். இது ஓர் சந்திப்பு மறுப்பு மட்டுமல்ல தமிழகத்திற்கு இழப்பு என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய மின்துறை அமைச்சரோடு சந்தித்து அதற்கான திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருந்தால் இரண்டு கூடன்குளங்கள் அமைப்பதற்கு ஈடான மின்சாரம் நமக்கு கிடைத்திருக்கும் என்பதை நம்புவீர்களா? மின் தடையில்லாத மாநிலமாக, மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறியிருக்கும் என்பதை நம்புவிர்களா ?
தேசிய எல்இடி பல்பு விநியோகம் என்ற திட்டத்தின் கிழ் மத்திய அரசின் திட்டங்கள் பிற மாநிலங்களில் மின் சக்தி சேமிப்புத்திட்டம் தொடங்கப்பட்டது. இது தமிழகம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது, இத்திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தால் வருடத்திற்கு 2040 மெகாவாட் மாநிலத்திற்கு எந்த செலவும் இல்லாமல் மிச்சமாகியிருக்கும்.
2040 மெகாவாட் என்பது இரண்டு கூடங்குளம் அமைப்பதற்கு ஒப்பாகும் போல் ஆகும். ஆக எந்தவித புதிய முதலிடும், செலவும் இல்லாமல் மாநிலத்திற்கு உபரியாக 2040 மெகாவாட் கிடைப்பது இந்த திட்டத்தை தமிழகம் மேற்கொள்ளததால் தடுக்கப்பட்டுயிருகிறது.
ஓவ்வொரு ஆண்டும் 535 கோடி ருபாய் மக்கள் பணம் சேமிக்கபட்டிருகும், அதுவும் தடுக்கபட்டிருகிறது. அரசாங்கத்தின் சுமைமட்டுமல்ல பொதுமக்களின் சுமையும் குறைந்திருக்கும், உதாரணத்திற்கு எல்இடி விளக்குகள் இப்போதுள்ள விளக்கு உடன் ஒப்பிட்டால் 90% குறைந்த மின்சாரமே தேவை அதனால் இத்திட்டம் நிறைவேற்றபட்டுடிருந்தால் பொதுமக்களின் மாத கரண்ட் பில் தொகை மிக கணிசமாக குறைந்திருக்கும்.
இந்த திட்டதிற்கு மத்திய அரசு ருபாய் 680 கோடி முதலீடு செய்ய காத்திருந்தது, மாநில அரசுக்கு ஒரு பைசா கூட செலவில்லாமல் மத்திய அரசு செயல்படுத்தும் இத்திட்டத்தினால் மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரப்ராதேஷ், கர்நாடக, ஹிமாச்சல பிரதேஷ், பாண்டிச்சேரி, கேரளா, ராஜஸ்தான் போன்ற அத்தனை மாநிலங்களும் மத்திய அரசோடு இணைந்து இந்த திட்டத்தை மேற்கொண்டிருப்பதால் மாநிலத்திற்கும், மக்களுக்கும் சுமை பல மடங்காக குறைந்திருகிறது.
ஆனால் இது தமிழகத்தில் நடைமுரைபடுத்தாததால் பல்லாயிரக்கணக்கான சுமை கூடியிருக்கிறது. உதாரணமாக கேரளாவில் எதிர்க்கட்சி ஆட்சி செய்தலும் மத்திய அரசு தாயுள்ளத்தோடு கொடுத்த இத்திட்டத்தினால் தினம் அரசுக்கு சுமாராக ஒரு கோடி ருபாய் மிச்சமாகிறது, 156 மெகாவாட் உபரியாக சேமிக்கப்படுகிறது.
ஓவ்வொரு நாளும் 21,37,791 கிலோவாட் மின்சாரம் மிச்சபடுத்தபடுகிறது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசின் இந்த திட்டதிற்கு செவிசாய்க்கவில்லை சென்னை மாநகராட்சி 145 கோடியில் 30,000 எல்இடி புல்புகளுக்காக டெண்டர் விட்டு மக்களின் பணத்தை வீனாகியிருக்கது, மத்திய அரசின் திட்டத்தை பெற்றுக்கொண்டு நடைமுறைபடுத்தினால் இதற்க்கு ஒன்றும் செலவே ஆகியிருக்காது.
இதைமுற்றிலும் உணர்ந்த காரணத்தினால் தமிழக பா.ஜ.க சார்பில் கடந்த செப்டம்பர் மாதமே இத்திட்டத்தை செயல்படுத்துங்கள் மக்களுக்கான சுமையை குறை என்று மனு கொண்டுக்கப்படது. அதன்மீதும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ஆக ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், இது போலவே பல திட்டங்கள் தமிழக மக்களுக்கு கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரால் மறுக்கப்பட்ட சந்திப்புகள் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகள் என்பதை மக்கள் உணரவேண்டும்" இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications