கருணாஸ் கைது பாரபட்சமானது.. விஜயகாந்த், தலைவர்கள் கண்டனம்
எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Recommended Video

சென்னை: எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வரை அவமதித்து பேசியது, காவல்துறை அதிகாரியை சவால் விடும் வகையில் பேசியது போன்றவற்றிற்காக கருணாஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை கருணாஸ் வள்ளுவர்கோட்டம் போலீசார் கைதுசெய்யப்பட்டார்.

பாஜக தலைவர்கள்
கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. கருணாஸ் கைது செய்யப்பட்டது சரியே என்றும், வரம்பு மீறி பேசியற்கான சரியான தண்டனைதான் இது என்றும் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றோர் ஒட்டுமொத்தமாக சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதிரியான கருத்தை தெரிவித்துள்ளனர். மேலும் எச்.ராஜா விவகாரம் பற்றி பேசும்போது மட்டும், அவர் நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வார் என்று சொல்லிவிட்டார்கள்.

காட்டமான கேள்விகள்
ஆனால் கருணாஸ் சாதி உணர்வை தூண்டியதாக பேசினார் என்றால், எச்.ராஜாவும் மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லையா? என்றும் கருணாஸை கைது செய்தது போல் ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என்றும் சீமான், இரா.முத்தரசன், ஜவாஹிருல்லா போன்ற தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் காட்டமாக கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

விஜயகாந்த் கண்டனம்
இதில் ஒருபடிமேல போய் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கருணாஸை கைது செய்ததற்கு கண்டனமே தெரிவித்துவிட்டார். பல பேர் கருத்துக்களை அவரவர்கள் நினைப்பதுபோல பேசிக் கொண்டிருக்கும்போது, கருணாசை மட்டும் 5-ம் தேதி வரை காவலில் வைப்பது சரியா என்றும் விஜயகாந்த் தனது அறிக்கை மூலமாக கேட்டிருக்கிறார்.

அச்சுறுத்தல் நடவடிக்கை
தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது, இன்னொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சுண்ணாம்பு, வெண்ணை?
ஒருகண்ணில் சுண்ணாம்பு, மறுகண்ணில் வெண்ணை வைத்து பார்ரக்கும் அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ள விஜயகாந்த் அனைவரையுமே சரிசமமாக அரசு பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications