தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆளுநரின் சர்சசையும்.. பெரிசுபடுத்தாதீங்க.. சொன்னது யார் தெரியுமா?
ஆம்பூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும், ஆளுநருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்,
தேர்தலுக்காக செயல்படும் அரசாக மட்டுமே திமுக உள்ளது என்றும் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சென்னையில் மழை வெள்ளம் ஒருநாள் தான் வந்தது. ஆனால், அந்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. அந்தப் பிரச்னையை சரிசெய்யாமல் விட்டுவிட்டு மீனவர்களையும், படகுகளையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தீபாவளிப் பண்டிகை வரவுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் விடுமுறையில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வருவார்கள். பொதுமக்கள் பயணம் செய்ய போதிய எண்ணிக்கையிலான பேருந்துகள் தமிழக அரசிடம் இல்லை. பண்டிகைக்காக தனியாரிடம் இருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுக்கின்ற நிலையே தற்போது உள்ளது. வாடகைக்கு எடுத்து போக்குவரத்து சேவை அளிக்கும் அளவுக்குத்தான் தமிழக அரசின் நிலை உள்ளது.
இதுபோல மற்றவர்களை நம்பி தான் இந்த அரசு இருக்கிறது என்றால் அந்த அரசு தேவையில்லை என்றுதானே அர்த்தம். வெள்ளத்தின்போது மீனவர்கள், படகு, தற்போது பண்டிகைக்காக பேருந்து உள்ளிட்ட அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் அரசை வாடகை அரசாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பயணிக்கின்ற அளவுக்கு போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை.
தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளே மிகவும் மோசமான நிலையில்தான் இயக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னையின் நிலைமை இப்படியாகிவிட்டது. டிசம்பர் மாதத்தில் பெருமழை வரப்போகிறது. அப்போது என்ன நிலை ஏற்படும் என்பது தெரியவில்லை.

ஒரு நாள் மழை வெள்ளத்தை வடியவைத்துவிட்டு அதையே பெரிய சாதனை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். டிசம்பர் மாதத்தில் வரவிருக்கும் பெருமழைக்கு இப்போதே முறையாக திட்டமிட வேண்டும். வெள்ள பாதிப்புகளுக்கு சரியான நிரந்த தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கஞ்சா, கள்ளச்சாராயம், டாஸ்மாக், வேலையின்மை, நெசவுத் தொழில் படுபாதாளத்தில் உள்ளது. திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி கூறினார். ஆனால், நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ந்த தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சைக்கும், ஆளுநருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அப்போது அங்கு ஏற்பட்ட தவறுக்கு தூர்தர்ஷன் சார்பில் மன்னிப்பு கோரிவிட்டது. அதோடு அந்தப் பிரச்னை முடிந்துவிட்டது. திமுகவினர் அதை பெரிதுபடுத்தக் கூடாது. ஆளுநரை தொடர்ந்து திமுகவினர் இகழ்ந்து பேசி வருகின்றனர்.
தேர்தலுக்காக செயல்படும் அரசாக மட்டுமே திமுக உள்ளது. மக்களுக்காக அவர்கள் செயல்படவில்லை. தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள், தோல் காலணி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரப்படுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம் என்று கூறிக் கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர்.
தமிழகத்தில் நலிவடைந்துள்ள தொழிற்சாலைகளையும் நலிவடைந்து வரும் தொழிற்சாலைகளையும் சீரமைக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சரான ஸ்டாலின் இப்பிரச்சனைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக விஜயகாந்த் நிறைய பேசி வந்தார்.
ஆனால், அவரை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் தேமுதிகவிற்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தில் மக்களாட்சியை விஜயகாந்த் கொடுத்திருப்பார். இப்போதும் காலம் உள்ளது. வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் தேமுதிகவிற்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நிச்சயமாக இந்த அவலநிலை மாறி மக்களாட்சியை கொடுப்போம் என்றார்.
-
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications