திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மதுரையில் காலமானார்
உடல் நலக்குறைவால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக ஸ்டார் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் காலமானார்.
மதுரை: திமுக தலைமைக் கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் சனிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 78.
மதுரையைச் சேர்ந்தவர் தீப்பொறி ஆறுமுகம். 1970களில் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். நீண்ட காலமாக திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு திமுக தலைவர் தன்னை புறக்கணிப்பதாக கூறி, அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக ஒன்பது ஆண்டுகளாக பணியாற்றினார். பின்னர் 2010ல் அதிமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று கூறி மீண்டும் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து திமுக பேச்சாளராக வலம் வந்த தீப்பொறி ஆறுமுகத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடேயே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, திமுக அறக்கட்டளை சார்பாக முதற்கட்டமாக ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் அவர் காலமானார். மதுரை ஹெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications