"கராத்தே" ராஜேந்திரன் பண்ணையிலிருந்து 32 கோழிகளை ஆட்டையைப் போட்ட 3 பேர் கைது!
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சண்டைக் கோழிகள் உள்பட 32 கோழிகளைத் திருடியதாக 3 பேரை போலீ்ஸார் கைது செய்துள்ளனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள வெள்ளைப்பனையேறிப்பட்டியைச் சேர்ந்தவர் அ.கராத்தே ராஜேந்திரன் (35). தோரணமலை அருகேயுள்ள கானாவூரில் உள்ள இவரது கோழிப் பண்ணையில் சண்டைக் கோழி உள்பட பல்வேறு தரப்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். சனிக்கிழமை இரவு இவரது கோழிப்பண்ணையில் 32 கோழிகள் திருட்டுப்போனது. இதுகுறித்து கராத்தே ராஜேந்திரன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாவூர்சத்திரம் பழைய சந்தையில் பலதரப்பட்ட கோழிகளை 4 பேர் விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது குறித்து பாவூர்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர்.
போலீஸாரைப் பார்த்ததும் ஓட முற்பட்ட 4 பேரில் 3 பேரைப் போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோழிப்பண்ணை அமைந்துள்ள கானாவூரைச் சேர்ந்த செ.அந்தோணி (25), கா.குத்தாலிங்கம் (30), பொ.மாரியப்பன் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 32 கோழிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கா.செந்தில்குமார் என்பவரைத் தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications