தமிழகம், புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நல்ல சேதி சொன்ன வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்பிருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. போதா குறைக்கு நேற்று முதல் கத்திரி வெயிலும் தொடங்கி மக்களை வறுத்தெடுத்து வருகிறது.

பல நகரங்களில் 110 ஃபாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் கோடை மழையும் பெய்துவருகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications