சட்டசபை உரிமைக் குழுவில் பங்கேற்க எனக்கு அழைப்பு இல்லை... முக ஸ்டாலின்
குட்கா விவகாரம் தொடர்பாக நாளை கூடவுள்ள சட்டசபை உரிமை குழுவில் பங்கேற்க தனக்கு அழைப்பேதும் விடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவாரூர்: குட்கா விவகாரம் தொடர்பாக சட்டசபை உரிமை குழு கூட்டத்தில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான முக ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் சட்டசபைக்கு கொண்டு சென்றனர். தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உட்பட 20 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமைமீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் சட்டசபை உரிமை மீறல் குழு கூட்டம் நாளை கூடவுள்ளது. இதுகுறித்து திருவாரூரில் கொரடாச்சேரியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின் கூறுகையில், சட்டசபை உரிமை குழு கூடுவது குறித்து எனக்கு அழைப்பேதும் விடுக்கவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்புவதற்காகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அவசர அவசரமாக உரிமை மீறல் குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். நான் ஆதாரத்தோடு குட்கா பொருள்களை கொண்டு வந்ததால்தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
எனவே என் மீதோ திமுக உறுப்பினர்கள் மீதோ தவறு ஏதும் இல்லை. திமுக எம்எல்ஏ-க்கள் வாக்களிப்பதில் இருந்து தடுப்பதற்காக முதல்வர் எடப்பாடி கையாளும் யுத்தி நிறைவேறாது என்றார் ஸ்டாலின்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications