பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை - விஜயகாந்த் சாடல்
சென்னை: பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை தமிழக காவல்துறையினர் பிடித்து விட்டதால், முதல்வர் ஜெயலலிதா காவல்துறைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எத்தனை கொலை, குற்றசம்பவங்கள் நடந்துள்ளன. இதில், குற்றவாளிகளை யாரையாவது காவல்துறையினர் பிடித்துள்ளனரா? திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கு, காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை சம்பவம் இதுபோன்ற வழக்குகள் என்ன ஆனது? இதையடுத்து, நீதிமன்றம் தலையிட்டதால், தற்போது விஷ்ணுபிரியா வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சுவாதியின் கொலை வழக்கிலும் நீதிமன்றத்தின் உத்தரவால் தான் தமிழக காவல்துறை இந்த வழக்கில் தீவிர காட்டியது. பெண்களை கேலிச்சித்திரம் செய்து இணையதளங்களில் வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications