காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் தியாகு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது, இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 1-ந் தேதி தியாகு சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் ஆதரித்தனர். ஆனால் கடந்த வாரம் தியாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரவே அங்கிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னரும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
இதனிடையே தியாகுவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இன்று தியாகுவின் உடல்நிலை மோசமடையவே அவரை போலீசார் வலுக்கட்டாயமாக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் ஆனால் ஆதரவு தலைவர்கள் முன்னிலையில்தான் போராட்டத்தை நிறைவு செய்வேன் என்றும் தியாகு வலியுறுத்தினார். போலீசாரோ அனுமதி மறுக்கவில்லை.
இந்நிலையில் மருத்துவமனையிலேயே தாய்த் தமிழ் பள்ளிக் குழந்தைகள் கொடுத்த பழரசத்தை அருந்தி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தியாகு நிறைவு செய்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications