பொறியில் சிக்கிய எலி போல.... ஏடிஎம் மைய கதவில் மாட்டிய கொள்ளையன் கைது
கோவை: கோவையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து, ஏடிஎம் மையத்தினுள்ளே சிக்கிக் கொண்ட கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம்-சங்கனுார் சாலையில், ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று காலை பணம் எடுப்பதற்காக சிலர் அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, எலிப்பொறியில் சிக்கிய எலி போன்று ஏடிஎம் மையத்தினுள் ஒருவர் மாட்டிக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் அளித்த தகவலையடுத்து, வங்கி அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர். அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்திருப்பது தெரியவந்ததால், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பாஸ்வேர்டு மூலமாக தானியங்கி கதவைத் திறந்தனர். விசாரணையில், அந்த நபர் வடகோவை பகுதியிலுள்ள மணியகாரம்பாளையம், அஞ்சுகம் நகரை சேர்ந்த கந்தசாமி(43) என்பது தெரியவந்தது. மேலும், நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏடிஎம் மையத்தின் தானியங்கி கதவு மூடிக் கொண்டதால் அவர் வசமாக போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications