பாத்திரக் கடைக்குள் திருடர்கள்.. பைசா தேறலை.. ஆனால், பக்கத்துக் கடையில் ரூ. 25,000 அபேஸ்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய பேருந்து நிலயம் அருகே ஒரு ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து சிலர் உள்ளே புகுந்து திருடப் பார்த்தனர். ஆனால் உள்ளே ஒரு பைசா கூட இல்லாததால் கடுப்பானார்கள். இருப்பினும் பக்கத்தில் இருந்த ஜவுளிக்கடைக்குள் புகுந்து ரூ. 25,000 பணத்தை கொள்ளையடித்து விட்டுப் போய் விட்டனர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை உள்ளது. நேற்றிரவு வியாபாரத்தை முடித்த பணியாளர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இன்று காலை வந்து கடையை திறந்தபோது கடையின் உள்ளே இருந்த மேசையின் லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 25ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளையர்கள் கடையின் மாடியில் இருந்த கதவினை உடைத்தும், வென்டிலேட்டரை உடைத்தும் உள்ளே புகுந்துள்ளனர்.

இதேபோன்று இந்த கடைக்கு அருகில் இருந்த பாத்திர கடைக்குள்ளும் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

இதனையறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த கடைக்கு மிகஅருகிலுள்ள டாஸ்மாக் கடையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தான் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தூத்துக்குடியில் அதிகரித்துவரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இனியாவது காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டு கொள்ளையர்களின் கொட்டத்தை ஒழித்து பொதுமக்களை பாதுகாத்தால் சரிதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+