கொள்ளையடித்த வீட்டின் முன் நகையை வீசிய திருடனால் பரபரப்பு
நெல்லை: களக்காடு அருகே கொள்ளையடித்த நகைகளை அந்த வீட்டின் முன்பே வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்தவர் விவசாயி ராஜதுரை. அவர் வீட்டில் உள்ள பீரோவில் 20 பவுன் நகை வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வேளையில் பீரோவை திறந்து பார்த்தபோது ஆறரை பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அக்கம், பக்கம் வசிப்பவர்களின் கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில்
மாயமான நகைகளில் 4 பவுன் நகை இரவு ராஜதுரை வீட்டு முன்பு வீசப்பட்டு கிடந்தன. இது குறித்து அவர் திருக்குறுங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு சென்று நகையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணை தீவிரம் அடைந்ததால் நகையை திருடிய மர்ம நபர்களே நகைகளை வந்து ராஜதுரை வீட்டில் வீசி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதில் ஈடுபட்ட
மர்ம நபர்கள் யார், மீதமுள்ள இரண்டரை பவுன் நகைகள் எங்கே என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications