முரசொலி பவள விழாவில் திருமாவளவனின் ஆதங்கத்தை தீர்த்து வைத்த ஸ்டாலின்
சென்னை: கருணாநிதியின் வைர விழா மேடையில் அமர வைத்திருக்கலாமே என்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் ஆதங்கத்தை முரசொலி பவள விழா மேடையில் நிறைவேற்றி வைத்திருக்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்று வரும் முரசொலி பவள விழா கொண்டாட்டத்தில், ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறுகிறார் வைகோ.
பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் கொண்டு வரும் முயற்சிகள் வேகம் எடுத்து வருவதன் ஒரு கட்டம்தான் இந்த விழா என்கின்றனர் திமுக நிர்வாகிகள். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடந்த முரசொலி பவளவிழா நிகழ்ச்சியில், வாழ்த்தரங்கம், படக்காட்சி என பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் ஸ்டாலின்.

நந்தனம் விழா
மறுநாள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், மழை காரணமாக முரசொலி பவள விழா மலர் மட்டுமே வெளியிடப்பட்டது. முழுமையான நிகழ்ச்சியாக அமையவில்லை.

கொட்டிவாக்கத்தில்..
பவள விழா கூட்டம் வேறு ஒரு மேடையில் பிரமாண்டமாக நடக்கும் என அறிவித்தார் ஸ்டாலின். அந்த நிகழ்ச்சியைத்தான் இன்று கொட்டிவாக்கத்தில் நடத்தி வருகிறார் ஸ்டாலின்.

வைரவிழா
முன்னர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் அகில இந்திய தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

திருமா ஆதங்கத்தை நீக்கிய ஸ்டாலின்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு மேடையின்கீழ்தான் இருக்கை போடப்பட்டிருந்தது. மதவாத சக்திகளுக்கு எதிராக திரண்ட அந்தக் கூட்டத்தின் மேடையில் எங்களுக்கும் இடம் கொடுத்திருக்கலாம் என ஆதங்கப்பட்டார் திருமா. இந்த ஆதங்கத்தைப் போக்கும்விதமாக இன்று திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஓரணியில் முரசொலி பவள விழா மேடையில் திரண்டுள்ளனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications