ராம்குமார் தற்கொலை .. சிபிஐ விசாரணை வேண்டும்… திருமாவளவன் கோரிக்கை
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் எழுந்துள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 24 ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஐடி பொறியாளர் சுவாமி கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஜுலை 1ம் தேதி ராம்குமார் நெல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட விதமே பல்வேறு சந்தேகங்களை பலருக்கு உருவாக்கி இருந்தது. தொடக்கத்தில் இருந்தே ராம்குமார் கைது பற்றியும் சுவாதி கொலை பற்றியும் பல்வேறு சந்தேகத்தை ஆழமாக எழுப்பி வந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
இந்நிலையில், இந்த தற்கொலை பற்றி திருமாவளவன் கூறியிருப்பதாவது: இந்தக் கொலை குறித்து தொடக்கத்தில் இருந்தே நான் சந்தேகம் எழுப்பி வந்திருக்கிறேன். இப்போது ராம்குமார் மின்கம்பியை கடித்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று தகவல் வெளியான சற்று நேரத்திற்கெல்லாம் ராம்குமார் உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது. இதனால், இந்த தற்கொலையில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ராம்குமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications