காவிரி: தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:
காவிரியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் பத்து நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு காவிரியில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையை அங்கீகரித்துள்ளது என்ற போதிலும், தமிழகத்துக்கு சட்டப்படி சேரவேண்டிய தண்ணீரில் அது கால்வாசிகூட இல்லை. இந்தத் தண்ணீரைக்கொண்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நாற்பதாயிரம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாது. இந்தத் தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் இந்தத் தண்ணீரைக்கூடத் தரக்கூடாது என கன்னட இனவெறி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கர்நாடக பந்த்துக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இந்த இனவெறிப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திறக்காத கர்நாடகா
கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் தரவேண்டிய நீரின் அளவை காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் வரையறுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரியில் 3 டி.எம்.சி., பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாடுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த அட்டவணைப்படி இதுவரை ஓர் ஆண்டில்கூட கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதில்லை.

கடிந்த சுப்ரீம் கோர்ட்
ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை தமிழகத்துக்கு 134 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த அளவைக்கூட வலியுறுத்தாமல் சம்பா பயிரைக் காப்பாற்ற வெறும் 50.52 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. உச்சநீதிமன்றமும் ‘வாழு வாழ விடு' என்று கர்நாடக அரசைக் கடிந்துகொண்டது.

ஆபத்தான அணுகுமுறை
உயிர்ப்பிச்சை போடுவதுபோல் 13 டிஎம்சி தண்ணீர் தர ஆணையிட்டது. ஆனால் காவிரி நடுவர் மன்ற உத்தரவையோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பையோ மதிக்காமல் இனவெறி நெருப்பில் குளிர்காய கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

கர்நாடகா திட்டவட்டம்
உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து கர்நாடக அரசு இன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்ட 13 டிஎம்சி தண்ணீரைக்கூட கர்நாடகம் தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அனைத்து கட்சிக் கூட்டம்
இந்நிலையில் அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவை மேற்கொள்ளும் வகையில் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications