16 நாட்கள் விவசாயிகள் டெல்லியில் போராட்டம்… நேரில் சந்தித்து திருமாவளவன் ஆதரவு
டெல்லி ஜந்தர் மந்தரில் 16 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னை: பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிகள், அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், இன்று விவசாயிகளை நேரில் சந்திக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று விமானம் மூலம் டெல்லி சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
16 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் வருகிறார்கள். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதுதான் காரணம். நெடுவாசல், காரைக்கால் போன்ற பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகும் கூட ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. பாஜகவினர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்று திருமாவளவன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications