மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணையவில்லை.. கூட்டணிதான் வைத்துள்ளோம்: திருமா விளக்கம்
சென்னை: தலித் முதல்வர் கோஷத்தை முன்வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது கொள்கையை தளர்த்திக்கொண்டுள்ளது. விஜயகாந்த்தான் முதல்வராவார், வரும் 23ம் தேதி ஜார்ஜ் கோட்டையில் பதவியேற்பார் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தேமுதிக மற்றும் மக்கள் நல கூட்டணி இடையே தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து செய்தியாளர்களுக்கு தலைவர்கள் ஒன்றாக பேட்டியளித்தனர். அப்போது திருமாவளவன் கூறியதாவது:

விஜயகாந்த் தன்னை கிங்காக பார்க்க தொண்டர்கள் ஆசைப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம், அப்போதே திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.
விஜயகாந்த் தனது தலைமையிலான கூட்டணியில் பிற கட்சிகள் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இப்போதும் அதுதான் நடந்துள்ளது. மக்கள் நல கூட்டணி, விஜயகாந்த்தின் தேமுதிகவோடு தொகுதி பங்கீட்டை செய்துள்ளது. அதாவது மக்கள் நல கூட்டணியும், தேமுதிகவும் தேர்தல் கூட்டணியை வைத்துள்ளனர்.
1967ல் அண்ணா தலைமையில் திமுக, அதுவரை கோலோச்சிய காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அமைத்தது. இதன்பிறகு அரை நூற்றாண்டுகள் காலமாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும்தான், மாற்றி, மாற்றி தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.
அரை நூற்றாண்டு காலவரலாற்றை இந்த கூட்டணி திருப்பி போட உள்ளது. வரும் மே 23ம் தேதி ஜார்ஜ் கோட்டையில் விஜயகாந்த் முதல்வராக பதவிக்கு வருவார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications