மோடியின் 'தலித்' பேச்சு.... ரவிக்குமாருக்கு திருமாவளவன் ஆதரவு!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலித்துகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தலித்துகள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது; தலித்துகளைத் தாக்குவதற்கு பதிலாக என்னை சுட்டுக் கொல்லுங்கள் என்பது பிரதமர் மோடியின் அண்மைய பேச்சு. இதற்கு பிரதமர் மோடியை இந்துத்துவா அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

அதே நேரத்தில் மோடியின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க பஞ்சாயத்து நடைபெறுகிறது.
இந்த நிலையில் ரவிக்குமாருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், மோடியின் பேச்சை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கிறோம்.
என்னைத் தாக்குங்கள் என்று சொல்வதன் மூலம் தலித்துகள் மீதான தாக்குதலை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதை ஆதரித்து ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இப்படி ஆதரிப்பது சரியா என எங்கள் கட்சியில் ஒரு பிரிவினர் கருத்து சொல்லியிருக்கின்றனர். எங்கள் கட்சியின் ஜனநாயகத்தன்மையை இது காட்டுகிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications