கஷ்டம் எனக்கும்தான்.. செல்லாத நோட்டுகளை வங்கிக்கு சென்று மாற்றிய திருமாவளவன்
செல்லாத பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய 2000 ரூபாய் நோட்டை திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.
சென்னை: தன்னிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி, புதிய 2000 ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்டார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்.
கடந்த ஒரு வாரமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால் கடுக்க மக்கள் வங்கி வாசலில் நின்று வருகின்றனர். ஏடிஎம் மையங்களும் சரிவர திறக்கப்படாததால் திறக்கப்பட்டுள்ள சில மையங்களின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் பணம் எடுக்க காத்துக்கிடக்கின்றனர். இதனால், அன்றாடம் செலவு செய்வதற்கே மக்களிடம் சில்லறை நோட்டுகள் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார்.

மத்திய அரசு இந்த அறிவிப்பை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார். மேலும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல் ஏழை, எளிய மக்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தொடர்ந்து திருமாவளவன் பேசி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை அசோக் நகரில் உள்ள வங்கி ஒன்றுக்கு திருமாவளவன் நேரில் சென்றார். அங்கு தன்னிடம் இருந்த பழைய செல்லாத நோட்டுகளை கொடுத்து, புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டார்.
மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொதுமக்களை இன்னலுக்கு ஆளாக்கிய ரிசர்வ் வங்கி கவர்னர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளை 10 மணியளவில் போராட்டம் நடத்த உள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications