50வது நாளாக சிறையில்.. திருமுருகன் காந்தியின் உடல்நிலை பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி!
வேலூர் சிறையில் உள்ள மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
வேலூர்: வேலூர் சிறையில் உள்ள மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பல முக்கிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐநாவில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

50 நாட்கள்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை.. ஆர்டிஐ அதிர்ச்சி!
இந்த நிலையில் அவர் சிறை சென்று இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்டது. அவர் உடல்நிலை இதனால் மோசமாக நலிவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மே17 இயக்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்று போட்டுள்ளது.
[மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை.. ஆர்டிஐ அதிர்ச்சி! ]

என்ன பிரச்சனை
அதில், திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக இன்று மீண்டும் வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு, செரிமானக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மறுப்பு தெரிவித்தனர்
ஆனால் அவரை அழைத்து வந்த காவல் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்றும், மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்புங்கள் என்று மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். அப்போது மருத்துவமனையின் மருத்துவர், இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருக்கும் நோயாளி, அவரது உடல்நிலை இருக்கும் நிலைக்கு சிகிச்சை அளிக்காமல் தன்னால் அனுப்ப இயலாது என்று தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்டார்
மருத்துவரின் தொடர்ச்சியான பரிந்துரை காரணமாக தற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையின் IMCU எனும் வார்டில் திருமுருகன் காந்தி அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமுருகன் காந்தி அவர்களின் உடல்நிலையை சிதைப்பதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வேலை செய்கிறதோ என்கிற ஐயத்தினை காவல்துறையினரின் நடவடிக்கைகள் எங்களுக்கு ஏற்படுத்துவதாய் இருக்கின்றன, என்று அந்த பேஸ்புக் போஸ்டில் கூறப்பட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications