காந்தி ஜெயந்தியன்று... விடுதலையானார் திருமுருகன் காந்தி!
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐநாவில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அது மட்டுமில்லாமல் பல முக்கிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.

கைது
முதலில் இவரை நீதிமன்ற காவலில் எடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது, அதனால் அவர் விடுதலையும் செய்யப்பட்டார். அதன்பின் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

52 நாட்கள்
இந்த நிலையில் அவர் வேலூர் சிறை சென்று இன்றோடு 52 நாட்கள் ஆகிவிட்டது. அவர் உடல்நிலை இதனால் மோசமாக நலிவடைந்து இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜாமீன் பெற்றார்
இந்த நிலையில் அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது. திருமுருகன் காந்தி மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளுக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் பிணை பெறப்பட்டது. அந்த ஆணை வேலூர் சிறையில் சிறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்டார்
இந்த நிலையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இதனால் சந்தோஷ மிகுதியில் உள்ளனர். அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வாய்ப்புள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications