திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேருக்கு சிறைக் காவல் நீட்டிப்பு
மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவல் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் அவரது நீதிமன்றக் காவல் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழர்களை மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக கொன்று குவித்தது.

தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் கொலை வெறி இனவெறித் தாக்குதல்களை நடத்தினர். மே 17-ஆம் தேதி நடந்த இந்த சம்பதவத்தை தொடர்ந்து ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தினர் சென்னை மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு அந் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டதால், கடந்த 21-ஆம் தேதி மே 17 இயக்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்தனர். அப்போது அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்த நிலையில் இந்திய ஆயில் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக திருமுருகன்காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் காவலை வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications