தமிழிசையின் சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு டிவிட்டுக்கு திருநாவுக்கரசர் கொடுத்த பதிலடி தெரியுமா?
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நடுவே டுவிட்டரில் போர் வெடித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் வழக்கில் தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பளித்தது. ஒருங்கிணைந்த அதிமுக அணிக்கே சின்னம், கட்சி, கொடி ஒதுக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றார்.

ஓபிஎஸ் - எடப்பாடி பழனிச்சாமி நடுவே மனதளவில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் ஜெயலலிதா மறைவிற்கு பின் மோடி, அமித்ஷா ஆலோசனையின் பெயரிலேயே அவர்கள் இணைந்தனர். அப்போதே இந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது தெரியும் என கூறியிருந்தார்.
இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த பாஜக தமிழக பிரிவு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
இரட்டை இலைச்’சின்னம்’பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்....
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 24, 2017
"இரட்டை இலைச்'சின்னம்'பாஜக வாங்கிக்கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்...." என்று கூறியிருந்தார். வடிவேலு பாணியில் இந்த டிவிட்டை அவர் வெளியிட்டார்.
'சின்ன'ப்பிள்ளைகள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள். https://t.co/uCTMlD6IOW
— Su.Thirunavukkarasar (@ThiruArasarINC) November 24, 2017
இந்த நிலையில், தமிழிசை டுவிட்டை ஆர்டி செய்துள்ள திருநாவுக்கரசர் "'சின்ன'ப்பிள்ளைகள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள்" என்று பதில் சொல்லியுள்ளார். உண்மையிலேயே இவர்கள் டிவிட்டரில் மோதிக்கொள்வதுதான் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications