ஒரு திடமான முடிவோடுதான் இருக்கிறார் போல திருநாவுக்கரசர்.. மீண்டும் அப்பல்லோ விசிட்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் தமாகாவை சேர்த்துக் கொண்டு காங்கிரஸை கழற்றிவிட திமுக முயன்றது. ஆனால் கருணாநிதியின் முயற்சியால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தது.
இருந்தபோதும் உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீட்டில் காங்கிரஸை பதம் பார்த்தது திமுகவின் ஸ்டாலின் தரப்பு. மிகச் சொற்ப இடங்கள்தான் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் கடும் அதிருப்தியில் காங்கிரஸ் இருந்து வந்தது.

ஜெ.வுக்கு ராகுல் ஆதரவு
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது. இதற்கு செக் வைக்கும் வகையில் சென்னைக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜெயலலிதாவுக்கு 'ஆதரவு' தருகிறோம் என்றார்.

திமுகவுக்கு எதிர்ப்பு
அத்துடன் கடந்த சில வாரங்களாக திமுக எந்த கோரிக்கையை முன்வைத்தாலும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அதனை எதிர்ப்பதையே குறிக்கோளாக இருந்து வருகிறார். ராகுல் காந்தியுடன் அப்பல்லோவுக்கு போயிருந்தார் திருநாவுக்கரசர்.

மீண்டும் அப்பல்லோ விசிட்
இந்த நிலையில் இன்று புதுவை முதல்வர் நாராயணசாமியை அழைத்துக் கொண்டு மீண்டும் அப்பல்லோவுக்கு வருகை தந்தார் திருநாவுக்கரசர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுக்கு ஆதரவாகவே கருத்துகளை வெளியிட்டிருந்தார். பொறுப்பு முதல்வர் தேவை என்ற ஸ்டாலினின் கோரிக்கையையும் நிராகரித்திருந்தார்.

ஆச்சரியத்தில் அதிமுக
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறு கட்சித் தலைவர்கள் கூட இப்படி அப்பல்லோவுக்கு அடிக்கடி வந்தது இல்லை... ஆனால் திருநாவுக்கரசர் தொடர்ந்து அப்பல்லோவுக்கு வருகை தருவது அதிமுகவினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் அரங்கத்திலும் ஒரு புதிய புயலுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications