காமராஜர் அரங்கத்தில் காமராஜர் படமே இல்லாமல் கருத்தரங்கு நடத்துவதா? காங்கிரஸில் புகைச்சல்
காமராஜர் அரங்கத்தில் காமராஜர் படமே இல்லாமல் கருத்தரங்கை நடத்தியதால் காங்கிரஸில் புகைச்சல் கிளம்பியுள்ளது.
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் காமராஜர் படம் கூட வைக்காமல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று பணமதிப்பிழப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட பின்னர் தமது பதவியை தக்க வைக்க தொடர்ந்து போராடி வருகிறார். இதன் ஒருபகுதியாக பணமதிப்பிழப்பு தொடர்பாக இன்று கருத்தரங்கத்தை திருநாவுக்கரசர் ஏற்பாடு செய்தார்.

பணமதிப்புநீக்கம்- மக்கள் படும் வேதனை என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்குக்கான பேனரில் ராகுல் காந்தி படம் மட்டுமே பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. காமராஜர் அரங்கத்தில் நடத்தும் நாம் காமராஜர் படத்தை கூட பேனரில் வைக்காமல் இருப்பது சரியல்ல என திருநாவுக்கரசரிடம் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கருத்தரங்கை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தாராம் திருநாவுக்கரசர். திராவிட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதாலேயே காமராஜரை ஒதுக்கி வைக்க முயற்சிக்கிறாரே என காங்கிரஸ் தொண்டர்கள் புலம்பல்தான் காமராஜர் அரங்கத்தில் கேட்க முடிந்தது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications