"மாஞ்சோலை"யில் யார்னு பார்த்தீங்களா.. அதுவும் கோயில் வாசலிலேயே.. கேஷூவலா அது பாட்டுக்கு.. பார்றா

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்ட கோவில் ஒன்றில் நடந்த இந்த சம்பவம்தான், இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. காண்போரையும் வியக்க செய்துவருகிறது.

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..

thirunelveli fantastic video and do you know who is this special guest in nellai temple

Bஇதில் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிலியை தந்துவிடுவதுதான்.. அதேபோல, விலங்குகள் தொடர்பான விடியோக்களும் பயத்தை தந்துவிடும்.. அப்படித்தான், ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த கடந்த 26ம் தேதி அக்னி முடிந்தாலும், வெயில் இன்னும் விடவில்லை.. சென்னை, வேலூர், மதுரை என ஒவ்வொரு மாவட்டங்களிலும் 100 டிகிரியை கடந்து பிளந்து கட்டிவருகிறது.. இந்த மாதத்தில் நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ட் வெப்பம் பதிவாகி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இப்படி அதிகரித்தது இது இரண்டாவது முறையாகும்.. அதனால்தான், பள்ளிகள் திறப்பும் தள்ளி போய் உள்ளது..

வனவிலங்குகள்: இந்த வெயிலை தாங்க முடியாமல், தமிழக மக்கள் புழுங்கி வருகிறார்கள்.. மனிதர்களுக்கே இப்படி என்றால், விலங்குகளுக்கு இந்த புழுக்கம் மிக கொடுமையானதாகவே இருக்கும்.. இந்த வெயிலில் இருந்து தப்பித்து கொள்வதாகவே, வனவிலங்குகள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன... அப்படித்தான் நெல்லையிலும் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குபட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி, கரடி, யானை போன்ற பல்வேறு வன விலங்குள் உள்ளன. இதில் குறிப்பாக மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் வடக்குத்தி அம்மன் கோவில் உள்ளது.

thirunelveli fantastic video and do you know who is this special guest in nellai temple

ஹாய் : இந்த கோவிலுக்கு பொதுமக்கள் அடிக்கடி வழிபட செல்வார்கள். அப்படித்தான் நேற்றும் சென்றிருக்கிறார்கள். அப்போது, கோவிலின் வாசலிலேயே ஒரு சிறுத்தை படுத்திருந்திருக்கிறது.. அங்கு அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை நிழலில், குட்டி சிறுத்தை ஒன்று ஹாயாக படுத்து கொண்டு, இளைப்பாறிக் கொண்டிருந்தது..

ஹைலைட்: இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. பீதி எக்கச்சக்கமாக கிளம்பினாலும், அங்கேயே ஒரு ஓரமாக பதுங்கியிருந்து, சிறுத்தை படுத்திருந்ததை தங்கள் செல்போனிலும் வீடியோ எடுத்து கொண்டனர். அந்த போட்டோக்கள்தான் இணையத்தில் இப்போது ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. கோயில் வாசற்படியில் கேஷூவலாக படுத்து ரெஸ்ட் எடுக்கும் இந்த சிறுத்தைதான் இன்னைக்கு சோஷியல் மீடியாவில் ஹைலைட்டே..!!

கலைமான்: 2 நாட்களுக்கு முன்பும் இப்படித்தான் ஒரு வீடியோ வைரலானது.. சிறுத்தை புலி இரண்டுமே சேர்ந்து ஒரு மானை அடித்து தாக்க முயல்கின்றன.. ஆனால் மான் அதற்கு சிக்காமல் எகிறி தப்பி ஓடுகிறது.. அந்த கலைமான் மிகவும் சாதுர்யமாக சண்டையிட்டதை பார்த்து இணையவாசிகள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்... 29 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.. இன்னமும் அந்த வீடியோ இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+