11 மணி நேர திருப்பத்தூர் திக் திக்.. கார் உள்ளே 5 பேர்! கதவை திறந்தால் இரைதான்! சிக்கிய சிறுத்தை
திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டிய தனியார் பள்ளி வளாகம் அருகே பதுங்கியிருந்த சிறுத்தை 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிக்கியது.
திருப்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்தனர்.

இதையடுத்து அந்த வீட்டிலிருந்த சிறுத்தை அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்கு சென்றுவிட்டது. அங்கிருந்த பள்ளி காவலாளி கோபால் என்பவரை தலையில் தாக்கியது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே பள்ளியில் இருந்த சிறுத்தை அருகே உள்ள கார் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்றது.
பக்கத்திலேயே பதுங்கிய சிறுத்தை.. காரில் 6 மணிநேரம் தவித்த 5 பேர்.. திக்திக் திருப்பத்தூர்
இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறுத்தையை பிடிப்பதற்காக ஓசூர், சேலத்தில் இருந்து 20 வனத்துறையினர் திருப்பத்தூருக்கு வந்தனர். கார் பார்க்கிங்கில் சிறுத்தை நுழைந்த போது அங்கிருந்த சில இளைஞர்கள் சிறுத்தையிடம் இருந்து தப்ப காரில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
அவர்கள் நீண்ட நேரமாக காருக்குள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி சிறுத்தைகள் தங்கள் காருக்கு அருகிலேயே இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில் திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
காரில் இருந்தவர்களிடம் வீடியோ காலில் பேசிய வனத்துறையினர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்றும் எக்காரணத்தை கொண்டும் காரில் இருந்து இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து கார் பார்க்கிங்கில் சிறுத்தை இருந்ததை உறுதி செய்த நிலையில் அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சித்தனர்.
அப்போது அங்கிருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதையடுத்து 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அதை உயிருடன் பிடித்து கூண்டில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முயற்சித்து வருகிறார்கள்.
காரில் இருந்து ஆரோக்கியசாமி, தினகரன், இம்ரான், அஸ்கர் கான், வெங்கடேசன் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆங்காங்கே சிறுத்தை காட்டை விட்டு குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அடர்ந்த வனத்திற்கு அருகே உள்ள மக்கள் அச்சத்துடன் நாளை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டின் தடுப்புச் சுவரில் ஏறி வந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அது போல் மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சிறுத்தை புகுந்து நாய்களை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இது போல் ஆங்காங்கே சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications