10 வயது சிறுமி பலாத்காரம்! ரயிலில் வெளி மாநிலத்திற்கு தப்பியோடிய கொடூரன்! 600 செல்போன் எண்கள் ஆய்வு
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ரயிலில் தப்பி சென்ற நிலையில் சம்பவ இடத்தை சுற்றி மொபைல் போன் டவரில் பதிவாகியிருந்த 600 பேர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூரில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி சனிக்கிழமை, 10 வயதுச் சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபரால் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

பொதுவாகப் பள்ளி நேரம் மதியம் 3 மணிக்கு விடப்படும் நிலையில், அன்றைய தினம் பகல் 12 மணிக்கே விடப்பட்டதால், அவர் தனது பாட்டி வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காக பேருந்துக்கு காத்திருந்த நிலையில் பேருந்துகள் ஏதும் இல்லாததால் நடந்தே சென்று கொண்டிருந்தார்.
அப்போதுதான் சிறுமியைப் பின்தொடர்ந்த அந்த நபர், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார்.
சிறுமியை ஆள் இல்லாத இடத்திற்குக் தூக்கிச் சென்று கத்தி முனையில் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார்.
அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது. அங்கிருந்து இரு முறை தப்பச் சிறுமி முயற்சித்தும், அவரைத் துரத்திப் பிடித்து அடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த நிலையில், 9 நாட்களாகியும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.
குற்றவாளி சிறுமியை பின்தொடர்வது, தூக்கிச் செல்வது உள்ளிட்ட வீடியோக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த கொடூரனின் தெளிவான புகைப்படமும் கிடைத்துள்ளது. அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவத்தில் குற்றவாளியின் புகைப்படமும் வீடியோவும் வெளியாகியிருந்தது. அவனை கண்டுபிடிக்க போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவனை பிடிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் மேற்பார்வையில் 3 டிஎஸ்பிக்கள் தலைமையிலான தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தை சுற்றி மொபைல் போனில் பேசிய நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 600 எண்களை தேர்வு செய்து அந்த எண்ணுக்கு உரியவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த நபர்களிடம் சிசிடிவியில் பதிவாகியிருந்த நபரின் புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறார்கள். அந்த நபர் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து புறநகர் ரயில் வாயிலாக ஆரம்பாக்கம் வந்துள்ளார். அவருக்கு மொபைல் போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர் இந்தியில் பேசியிருந்தார்.
இதனால் சூளூர்பேட்டை மற்றும் ஆரம்பாக்கம் இடையே, ரயில் பாதையில் உள்ள டவர்களில் பதிவான மொபைல்போன் எண்களையும், போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பலாத்கார சம்பவத்திற்கு பிறகு அவர் ரயிலில் ஏறி வெளிமாநிலத்திற்கு தப்பிச் சென்றனர்.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கு அந்த நபரின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்ட போலீஸார், இவரை பார்த்தால் போலீஸுக்கு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அவரை பார்த்தால் 99520 60948 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை தவெகவினர், 300 பேர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications