பஞ்சாயத்துக்கு வந்தவரை விரட்டி விட்டு அவரது மனைவியை அபகரித்தவருக்கு அதிமுகவில் சீட்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கோரி மனைவியுடன் வந்த நபரை விரட்டியடித்து விட்டு அவரது மனைவியை அபகரித்து தன் மனைவியாக்கிக் கொண்டவருக்கு அதிமுகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அதிமுக வேட்பாளரால் விரட்டியடிக்கப்பட்ட நபர் மன நலம் பாதித்து காதல் படத்தில் வரும் முருகனைப் போல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரிதாபமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் இன்னும்.

திருவண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்படடுள்ள பெருமாள் நகர் ராஜன் குறித்துத்தான் தொகுதியில் இப்படிப் பேசுகிறார்கள். அதிமுகவினரை இந்தக் கொடுமையை போஸ்டர் அடித்தும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் பரப்பி வருகின்றனர்.

குடும்பத்தைக் கலைத்தவர்

குடும்பத்தைக் கலைத்தவர்

ராஜனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நிலையில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கோரி தன்னை நம்பி வந்த சேகர் என்பவரின் குடும்பத்தைக் கலைத்து அவரை பைத்தியமாக்கி விட்டார் ராஜன்.

7 வருடத்திற்கு முன்பு

7 வருடத்திற்கு முன்பு

7 வருடத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாம். மனைவி கலைச்செல்வியுடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கோரி ராஜனை அணுகியுள்ளார் சேகர். அப்போது கலைச்செல்வியைப் பார்த்து மோகம் கொண்ட ராஜன், சேகரை அவரிடமிருந்து பிரித்து விட்டார்.

தாயார் தற்கொலை

தாயார் தற்கொலை

கலைச் செல்வியை தனது மகனிடமிருந்து ராஜன் பிரித்து அபகரித்ததால் அதிர்ச்சி அடைந்த சேகரின் தாயார் மங்கை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். சேகர் மன நலம் பாதிக்கப்பட்டார்.

பைத்தியமாக சுற்றுகிறார்

பைத்தியமாக சுற்றுகிறார்

ஒரு பைத்தியம் போல திருவண்ணாமலை நகரிலும், கிரிவலப் பாதையிலும் சேகர் சுற்றித் திரிவதை இப்போதும் கூட பார்க்கலாம். அந்த அளவுக்கு அவரது நிலைமை பரிதாபமாகி விட்டது.

2 மனைவிகளுடன்

2 மனைவிகளுடன்

கலைச்செல்வியையும் தனது மனைவியாக்கிக் கொண்ட ராஜன், முதல் மனைவி விஜயலட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்றினார். ஆனால் அரசியலில் "கெளரவம்" முக்கியம் என்பதால் மனைவியையும் கூட்டி வந்து இருவரையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வருகிறாராம்.

இவரா வேட்பாளர்?

இவரா வேட்பாளர்?

இப்படிப்பட்டவர் வேட்பாளரா, இவர எம்.எல்.ஏ ஆனால் உங்களது நிலை என்ன என்று கேட்டு திருவண்ணாமலையில் அதிமுகவினரே போஸ்டர் ஒ!டியுள்ளனர். வாட்ஸ் ஆப்பிலும் பரப்பி வருகின்றனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+