உன் புருஷனைக் கொன்னுட்டேன்.. இது கள்ளக்காதலன்.. "மகிழ்ச்சி".. இது மனைவி!
கர்ச்சீப்பால் கழுத்தை நெரித்துக் கொன்ற கள்ளக்காதலன்.. கணவன் இறந்த தகவலைக் கேட்டு "மகிழ்ச்சி" என்ற மனைவி!
திருச்சி: திருச்சி அருகே இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியும், மனைவியின் கள்ளக்காதலனும் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். இருவரும் கடந்த 2 வருடமாக கள்ளக்காதலில் திளைத்து வந்ததும், தங்களது சந்தோஷத்திற்கு இடையூறாக இருந்ததால் கணவரை போட்டுத் தள்ளி விட்டதும் தெரிய வந்துள்ளது. அதை விடக் கொடுமையாக, தனது கணவரை கள்ளக்காதலன் கழுத்தை நெரித்துக் கொன்ற செய்தியைக் கேட்ட மனைவி, கபாலி ரஜினி போல, மகிழ்ச்சி என்று கூறினாராம்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜிதா. இவர்தான் இந்த சோகக் கதையின் நாயகி. இவருக்கு 25 வயதாகிறது. இவரது கணவர் பெயர் ஜெகன்பாபு. இவருக்கு 31 வயதாகிறது. கடந்த ஜூன் மாதம் 7ம் தேதிதான் திருமணம் நடந்தது. கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அஜிதா நர்ஸாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், ஜூலை 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ஜெகன்பாபு சென்னையில் உள்ள மனைவி அஜிதாவை பார்ப்பதற்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார். வந்தவர் மறுநாள் காலை 8ம் தேதியன்று திருச்சி ரயில் நிலைய ரயில்வே பாலம் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
முதலில் விபத்து என்று பதிவு செய்து வழக்கை விசாரித்து வந்தனர் போலீஸார். இந்த நிலையில் தற்போது அஜிதாவையும் அவரது கள்ளக்காதலர் ஜான் பிரின்ஸ் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸில் அஜிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம்:

கட்டுப்பட்டி ஜான் பிரின்ஸ்
கேளம்பாக்கம் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த அஜிதா, அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த வேலூர் மாவட்டம் கட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜான் பிரின்ஸுடன் கள்ளக்காதல் கொண்டார். ஜான் பிரின்ஸ் ஏற்கனவே திருமணமானவர்.

2 வருஷம்
கடந்த இரண்டு வருடமாக இவர் சுற்றித் திரியாத இடமே இல்லையாம் சென்னையில். சிலமுறை இதில் கர்ப்பமும் தரித்துள்ளார் அஜிதா. ஆனால் கவலைப்படாமல் அடுத்தடுத்து கலைத்துள்ளார்.

திடீர் திருமணம்
இந்த நிலையில் தான் சொந்த ஊரில் ஜெகன்பாபுவை பிக்ஸ் செய்துள்ளனர் அஜிதாவின் குடும்பத்தினர். இதனால் அஜிதா அதிர்ச்சி அடைந்தார். ஜான் பிரின்ஸை விட்டு விலக அவருக்கு மனமில்லை. இருப்பினும் தந்தையின் வலியுறுத்தலால் திருமணத்திற்குச் சம்மதித்தார்.

கல்யாணம் ஆனாலும் வருவேன்
ஆனால் ஜான் பிரின்ஸிடம் எனக்குக் கல்யாணம் ஆனாலும் உன்னை மறக்க மாட்டேன். தொடர்ந்து சந்தோஷமாக இருப்போம் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார் அஜிதா.

முதலிரவே நடக்கவில்லை பாவம்!
திருமணம் செய்து கொண்டாலும் கூட ஜெகன்பாபுவை தன் பக்கமே நெருங்க விடவில்லையாம் அஜிதா. ஒரு கட்டத்தில் சென்னைக்குக் கிளம்பி வந்து விட்டார். வந்தவர் லீவு போட்டு விட்டு ஜான் பிரின்ஸிடம் போய் விட்டார். அவரிடம் அழுதுள்ளார். இருவரும் பேசி முடிவு செய்து ஜெகன்பாபுவைக் கொலை செய்ய முடிவெடுத்தனர்.

டாக்டர் பேசுவதாக கூறி
கடந்த 7ம் தேதி ஒரு டாக்டர் பேசுவது போல ஜெகன்பாபுவிடம் பேசி சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளார் ஜான் பிரின்ஸ். அவரும் கிளம்பி வந்தார். வந்தவரை வழியிலேயே திருச்சியில் இறங்க வைத்து காரில் சென்னைக்குப் போகலம் என்று கூறி அழைத்து திருச்சி ரயில் நிலைய பாலம் அருகே வைத்து கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார் ஜான் பிரின்ஸ்.

மகிழ்ச்சி!
ஜெகன்பாபுவைக் கொன்று விட்ட தகவலை உடனடியாக போன் செய்து அஜிதாவுக்கும் கூறியுள்ளார் ஜான். அதைக் கேட்ட அஜிதா, ரஜினி பாணியில் மகிழ்ச்சி என்று கூறினாராம்.
தற்போது அஜிதா திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் சிறையிலும், ஜான் பிரின்ஸ் திருச்சி மத்திய சிறையிலும் கம்பி எண்ணி வருகின்றனர்.
-
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications