பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது: கருணாஸ் குற்றச்சாட்டு

எம்எல்ஏ கருணாஸை போலீசார் இன்று கைது செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட காட்சிகள்- வீடியோ

    சென்னை: பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என கைது செய்யப்பட்ட கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கடந்த வாரம் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் முதலமைச்சரை அவதூறாக பேசியிருந்தார். முதலமைச்சர் தன்னை பார்த்து பயப்படுவதாகவும் இந்த அரசு அமையவே தான் தான் முக்கிய பங்கு வகித்ததாகவும் இந்த கூட்டத்தில் கருணாஸ் பேசியிருந்தார்.

    வீடியோக்கள் வைரல்

    வீடியோக்கள் வைரல்

    மேலும் தமிழக காவல்துறை அதிகாரியையும் அவதூறாக பேசியதுடன், அவருக்கு சவாலும் விடுத்திருந்தார். இந்த பேச்சுக்கள் தொடர்பான வீடியோக்கள் யூ டியூப் உள்ளிட்டவற்றில் வைரலாக பரவியது.

    இன்று காலை கைது

    இன்று காலை கைது

    இதனையடுத்து அவதூறு உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வள்ளுவர்கோட்டம் போலீசார் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்காக 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை கருணாஸை போலீசார் தற்போது கைது செய்தனர்.

    பேச்சுரிமை இல்லை

    பேச்சுரிமை இல்லை

    அப்போது செய்தியாளர்களிடம் கருணாஸ் கூறியதாவது: "என் மீதான வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வேன். என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என தெரியவில்லை. பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் சட்டத்தை மதிப்பவன் நான். கொலை முயற்சி வழக்கு போடும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை.

    பதட்டம்

    பதட்டம்

    இவ்வாறு கருணாஸ் கூறினார். தற்போது கருணாஸ் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர்.இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். எனினும் கருணாஸ் வீட்டின் முன்பு ஒரு பதட்டமான சூழலே நிலவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+