வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கு உங்கள் வாக்கு?
ஒரு சட்டை வாங்க அரை மணி நேரம் சிந்திக்கும் நாம் நமது வாழ்வியலைத் தீர்மானிக்கும் ஓட்டினை சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ அல்லது சிந்தனை ஏதும் இல்லாமலோ சர்வ சாதரணமாக யாரோ ஒருவருக்கு அளிப்பது என்பது தான் நம் நாட்டிற்கு நாம் இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.
எனவே யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்ற கேள்விக்குள் செல்வதற்கு முன் இன்றைய நிலையில் நமது தேவை என்ன என்பதை விளங்கிக் கொள்வது அவசியம். நமது தேவைகளை உணர்ந்து அதற்கான திட்டங்களை முன்வைக்கும் கட்சியினை தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும்.

நீராதாரம்:
1000 அடி வரை துளையிட்டு நீர் உரியத் துவங்கி விட்டோம். கிட்டத்தட்ட அனைத்து ஆறுகளும் வரண்டாயிற்று, எத்தகைய வரட்சியையும் தாங்கி நிற்கும் பனை மரமே காய்ந்து போகும் நிலை. உயிர்ச் சூழலின் அடிப்படையான நீராதாரத்தை இழந்து நிற்கும் நிலையில் இன்றைய முதன்மையான தேவையான நீர் மேலாண்மையை முன்னிறுத்துவது அதிமுக்கிய கடமையாகும். ஆற்று மணல் கொள்ளைத் தடுப்பு, சிறப்பான நீர் மேலாண்மை என்று நாம் நகரத் தவறினால் தமிழகம் வாழத் தகாத இடமாக மாறும் என்பது உறுதி.

கல்வி, மருத்துவம்:
நமது பொருளாதாரம் இன்று பெரும்பாலும் கல்விக்கும், மருத்துவத்துக்கும் செலவு செய்யப் படுகிறது. பல குடும்பங்களை ஏழ்மையில் தள்ளியதும், தொடர்ச்சியாக பல குடும்பங்கள் பொருளாதார மேம்பாடு அடையாமல் தவிப்பதும் மருத்துவம், கல்விக்கான மிகப்பெரும் செலவுகளால்தான். இவற்றைக் கட்டுப்படுத்தாத வரை நடுத்தர குடும்பத் தலைவர்கள் கல்வி, மருத்துவச் செலவுகளுக்கான பொருளாதாரத்தை ஈட்ட ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஈட்ட இயலாத குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கிழே தள்ளப் பட்டுக் கொண்டே இருக்கும்.

வேளாண்மை
இன்றும் அதிக வேலை வாய்ப்பை வழங்கும் வேளாண் துறையைச் சரியாகக் கையாண்டு அழிவின் விழிம்பில் இருக்கும் வேளாண் தொழிலை மீட்டெடுப்பதன் மூலம் நமது மாநிலத்தின் 50% மக்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும். இல்லையேல் நமது வேளாண் தொழில் முற்றிலும் கை விட வேண்டிய சூழல் அதி விரைவில் ஏற்படும்.

இயற்கை வளம்:
மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை, மலைகள் உடைப்பு என வீட்டில் இருப்பதை விற்றுக் குடிக்கும் ஆசாமி போல் செயல்படும் அரசாங்கத்தால் ஏற்பட்டுள்ள இயற்கை வள அழிப்பு மிகுந்த கவனத்திற்கு உள்ளாக வேண்டியது. நமது அன்றாட வாழ்வியல் நடைமுறையில் இவை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும் நாளை நம் தலைமுறை இங்கு வாழ, மீட்டெடுக்க முடியாத இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உடனடித் தேவையாகிறது.

பொருளாதார மேம்பாடு:
சேவை மற்றும் சந்தைப் பொருளாதாரத்தால் ஏற்பட்டுள்ள சார்புநிலை மற்றும் தேக்க நிலையை எதிர்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்ட மாநிலமாக வளர உற்பத்தி சார் பொருளாதாரத்தை முன்வைப்பது மிக அவசியத் தேவை ஆகிறது. உற்பத்தி சார் பொருளாதாரத்தால் நாடு நாடாக அலையாமல் நமது மண்ணிலேயே கல்விக்கேற்ற வேலைவாய்ப்புகள் உருவாக்கும் நிலை ஏற்படும்.

இதை யார் செய்வது?
அதிமுக, திமுக, பாமக, நாம்தமிழர், மநகூ, பாஜக என களத்தில் இருக்கும் இயக்கங்களில் யார் நமது தேவையை முன்னெடுப்பார்கள் எனும் கேள்விக்கு வருவோம். 50 ஆண்டு கால ஆட்சியின் விளைவாகத்தான் இந்தச் சிக்கல்கள் எனும்போது திமுக அல்லது அதிமுக இந்தச் சிக்கல்களுக்கான தீர்வை நோக்கி நகர எந்த வாய்ப்பும் இல்லை. மேலும் இவர்களே பல கல்வி நிலையங்களையும், மணல் குவாரிகளையும் வருவதால் எந்த சிக்கலுக்கும் தீர்வு இவர்களிடத்தில் இருந்து எதிர்படாது.
பாமக, மநகூ, பாஜக ஆகிய கட்சிகள் இத்தனை வருட அரசியல் முன்னெடுப்பில் இங்கே குறிப்பிட்ட எந்த சிக்கலுக்கும் சரியான நகர்வை முன்வைக்கவில்லை அதுமட்டுமின்றி இந்த கட்சிகளுக்கு நீர் மேலாண்மை, தற்சார்பு பொருளாதாரம் பற்றிய பார்வையே இல்லை.

எது சரியான தேர்வு
இறுதியாக எஞ்சி இருக்கும் நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த அரசியல் கட்சியும் சிந்திக்காத சரியான சிந்தனைகளை முன்னெடுத்து மிகத் துல்லியமாக நீர் மேலாண்மை, வேளாண்மை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என சிக்கல்களை வரிசைப்படுத்தி அதற்கான சரியான தீர்வுகளை முன்வைக்கிறார்கள்.

எதிர்கால நோக்கம்
எனவே சாதி, மத , கட்சி பாகுபாடுகளைக் கடந்து ஒரு நல்ல தாய், தந்தையராய் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நாம் தமிழரின் ஆதரவு நிலைப்பாட்டை இந்த முறை எடுப்பதை நமது கடமையாக நினைக்க வேண்டியுள்ளது.
நாம்தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவில் இந்த சிக்கல்களுக்கான அனைத்து நகர்வுகளும் தெளிவாக முன்வைக்கப் பட்டுள்ளது. இந்த வரைவை ஒரு முறை இந்த சுட்டியில் www.makkalarasu.com இல் படித்துவிட்டுப் பிறகு பொறுப்புணர்வுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும்.












Click it and Unblock the Notifications