இதுவும் விளையாட்டுதான்.. லிப்ட் ஆபரேட்டர் மிருகத்தின் வெறிச்செயல்கள்!
சென்னை சிறுமி பலாத்கார விவகாரத்தில் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் இதுவும் ஒரு விளையாட்டுதான் எனக்கூறி மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: சிறுமி பலாத்கார விவகாரத்தில் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், இதுவும் ஒரு விளையாட்டுதான் எனக்கூறி தனது வெறியாட்டத்தை தொடங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமி 7 மாதங்களாக 15 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்து வந்த லிப்ட் ஆபரேட்டர், பிளம்பர், எலக்டிரிஷியன் என 17 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

திடுக்கிடும் தகவல்கள்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 7 மாதங்களாக சிறுமி தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார்.

சிறுமியாக பார்க்காமல்
முதலில் லிப்ட் ஆபரேட்டரான 66 வயது முதியவரான ரவிக்குமார்தான் தனது வெறியாட்டத்தை தொடங்கியுள்ளார். பள்ளிக்கு செல்லும்போது லிப்ட்டை பயன்படுத்திய சிறுமியிடம் பழகிய ரவிக்குமார், பேத்தி வயது சிறுமியை ஒரு குழந்தை என பார்க்காமல் தனது காமவெறியை தீர்த்துக்கொள்ளும் பெண்ணாக பார்த்துள்ளார்.

இதுவும் விளையாட்டுதான்
குடியிருப்பில் ஆட்கள் இல்லாதபோது சிறுமியை 8வது மாடி லிப்ட்டுக்கு அழைத்து சென்ற ரவிக்குமார், லிப்டை மூடி அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுத்ததால் இதுவும் விளையாட்டுதான் எனக்கூறி அங்கேயே வைத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

ஆடைகளை களைந்து..
அப்போது பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம் என சிறுமியின் ஆடைகளை களைந்து ஆபாசமாகவும் வீடியோ எடுத்துள்ளார். இந்த விஷயம் அங்கு பணிபுரியும் தனது கூட்டாளிகளுக்கும் தெரியவரவே அவர்களுக்கும் சிறுமியை விருந்தாக்கியுள்ளார் ரவிக்குமார்.

அச்சமும் பயமும்..
சிறுமியை பலாத்காரம் செய்யபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே இது ஏதோ தவறு என அச்சமும் பயமும் ஏற்பட்ட சிறுமி அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்துள்ளார். அப்போது கத்தி முனையில் அவரை பலாத்காரம் செய்துள்ளது அந்த கும்பல்.

குறையை சாதகமாக..
அதோடு மட்டுமின்றி சிறுமி பெற்றோரிடம் சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சிறுமிக்கு மயக்க மருந்தும் , போதை மருந்தும் செலுத்தி காரியத்தை சாதித்துள்ளனர். இதற்கெல்லாம் சிறுமி வாய் பேச முடியாதவர் காது கேளாதவர் என்பதை சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.

தொடை, வயிற்றில் ஊசி
மேலும் பிரசவ நேரத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மருந்ததையும் அந்த அப்பாவி சிறுமிக்கு கொடுத்துள்ளனர். பலமுறை சிறுமியின் தொடையிலும் வயிற்றிலும் ஊசிகளை போட்டுள்ளது அந்த வெறிபிடித்த கும்பல்.

நெஞ்சை உலுக்கும் கொடுமைகள்
ஒவ்வொரு நாளும் நெஞ்சை உலுக்கும் கொடுமைகள் நேர்ந்தது என்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே சிறுமியை மனசாட்சியின்றி பலாத்காரம் செய்த நபர்களுக்கு கொடூரமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலித்து வருகிறது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications