திட்டக்குடி: மது போதையில் வாலிபரின் காதை கடித்து துப்பிய 3 பேர் கைது
திட்டக்குடி: மது போதையில் வாலிபரின் காதைக் கடித்துத் துப்பிய 3 பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வதிஷ்டபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(30) என்ற விவசாயி சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த வினோத்(28), கிருஷ்ணமுர்த்தி(29), முருகன்(29) ஆகிய 3 பேரும் சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் மூவரும் மது போதையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஓட்டலுக்கு சாப்பிட வந்த சிவக்குமாரின் நண்பர் சாப்பிட இட்லி இருக்கிறதா என ஓட்டல் ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு மது போதையில் இருந்த நண்பர்கள் கிண்டலாக பதிலளித்துள்ளனர்.
இதனை தட்டிக் கேட்ட சிவக்குமாரை அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அண்ணன் தாக்கப் பட்ட தகவலறிந்து சிவக்குமாரின் தம்பி ராஜேஷ் குமார் (25), ஓட்டலுக்கு விரைந்து வந்துள்ளார். அங்கிருந்த வினோத் தரப்பினரிடம், தனது அண்ணனை தாக்கியது குறித்து நியாயம் கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. அப்போது வினோத் தரப்பில் இருந்த ஒருவர், திடீரென ராஜேஷ்குமாரின் இடது காதை கடித்து துப்பினார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வினோத், கிருஷ்ணமுர்த்தி, முருகன் ஆகிய 3 பேரையும் திட்டக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications