For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார் திருமாவளவன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விசாரித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விசாரித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் முதலே ஒவ்வாமை, சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார் கருணாநிதி.

Thol.Thirumavalavan visit karunanidhi's house

இதையடுத்து கோபாலபுரம் வீட்டிலேயே கருணாநிதி தீவிர ஓய்வு பெற்று வருகிறார். அவருக்கு பேச்சு தெரபி உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கிடையே, மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, அவர் நேற்று கருணாநிதியிடம் ஆசி பெற்றார். இந்த படம் நேற்று திமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் இன்று சென்றார். அங்கு, கருணாநிதியின் குடும்பத்தாரிடம் அவரது உடல்நிலை குறித்து திருமாவளவன் கேட்டறிந்தார். இதையடுத்து, கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் கருணாநிதியின் உடல்நிலையை மட்டும் திருமாவளவன் விசாரித்ததாகவும் அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

English summary
VCK chief Thol.Thirumavalavan Enquires About DMK chief Karunanidhi's Health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X