தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி: தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்மநபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்ததால் தூத்துக்குடி பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாநகர காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், தூத்துக்குடியில் இயங்கும் 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை இன்று மாலை 4 மணிக்குள் வெடிக்குமென்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனடியாக இது தொடர்பாக தூத்துக்குடி போலீசாருக்கு தெரிவிக்கப் பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் தூத்துக்குடியில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது வெடிகுண்டுகளோ அல்லது சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் பொருட்களோ சிக்கவில்லை. எனவே, தொலைபேசி மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அது தூத்துக்குடி வட்டக்கோயில் அருகே உள்ள ஒரு பொதுத் தொலைபேசியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனவே, தொலைபேசியில் பேசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக பரவிய தகவலால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். பின்னர், வெடிகுண்டு வைக்கப் பட்டதாகக் கூறப்பட்டது வெறும் மிரட்டல் எனத் தெரியவந்ததை அடுத்து அவர்கள் ஆறுதல் அடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications