தொடரும் துப்பாக்கிச்சூடு.. தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கடந்த 2 நாட்களாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மருத்துவமனையில் சிகிச்சை
இதில் இதுவரை 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சியர் எஸ்பி மாற்றம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோரை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தீப் நந்தூரி நியமனம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் சர்வ சிக்ஷா அபியான் மாநில திட்டத்தின் கூடுதல் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி ஆட்சியராக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முரளி ரம்பா நியமனம்
இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வட சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்பியாக முரளிரம்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

சரியாக கையாளவில்லை
நீலகிரி எஸ்பியாக சென்னை வடக்கு போக்குவரத்து காவல் ஆணையர் சண்முகப் பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தை சரியாக கையாளததால் தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு அதிரடி உத்தரவு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications