தமிழக அமைச்சரவையில் தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பனுக்கு இடமில்லை !
சென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோருக்கு தற்போதைய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தேர்தலின் போது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 15 பேர்களுக்கு மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமியிடம் தோல்வியைத் தழுவினார். ஆர்.வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றியை பறிகொடுத்தார். அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட பா.வளர்மதி, அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா மற்றும் பி.மோகன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், காமராஜ், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்ட14 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு தற்போதைய அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பாப்பிரெட்டிப்பட்டியில் வெற்றி பெற்ற உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், பெருந்துறையில் வெற்றி பெற்ற சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.வெங்கடாச்சலம் ஆகியோருக்கு புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
அதிமுக சார்பில் முதலாவது வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், பழனியப்பனுக்கு இடம் அளிக்கப்படவில்லை. தருமபுரியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தை முடித்தப் பிறகே, பாப்பிரெட்டிபட்டியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றப்பட்டு பழனியப்பனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் பழனியப்பனை ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்ததார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications