அந்த பக்கம் போனாலே.. உடம்பே நடுங்குதே.. தொப்பூர் கணவாயில் மீண்டும் கொடூரம்.. 4 பேர் பரிதாப பலி
தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் பயங்கர விபத்து காரணமாக 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார் பைக் மீது லாரி மோதிய கோர விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
லாரி பிரேக் பெயிலியர் காரணமாக வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. தொப்பூர் கணவாய் பகுதியில் தொடரும் விபத்துகள் காரணமாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொப்பூர் கணவாய் - தொடரும் விபத்துகள்
தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துரையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 11 ஆண்டில் 961 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும்.
தொப்பூர் கணவாய்: விபத்து உண்மையான காரணம்
பெங்களூரில் இருந்து தமிழ்நாடு உள்ளே வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக சாலையின் உயரம் குறையும். இந்த பகுதியில் சாலை எதிர்பார்க்காத அளவிற்கு சரிவாக இருக்கும். சாலையில் சாதாரணமாக செல்லும் போது அதை உணர முடியாது. ஆனால் புவியியல் அடிப்படையில் பார்த்தால் நாம் மலையில் இருந்து சரிவாக வாகனத்தை ஓட்டி இறக்குவது இறக்க வேண்டும்.
இதில் கார்கள் எளிதாக இறங்கிவிடும். காரணம் அதன் பிரேக். ஆனால் லாரிகளில் இருப்பது ஏர் பிரேக். அவை பிரஷர் வைத்து இயங்குபவை. இங்கே லாரியை வேகமாக இயக்கினால் அது கட்டுப்பாட்டை இழந்து சரியான ரோடு என்பதால் விபத்து ஏற்படும். அதுவே.. லாரியை பிரேக் பிடித்தபடியே மெதுவாக இயக்கினாலும் பிரேக் பிரஷர் குறைந்து குறைந்து பிரேக் பெயிலியர் ஆகிவிடும்.
லாரிகளில் உள்ளே ஏர் பிரேக் பெயிலியர் ஆவதே இங்கே நடந்த 90 சதவிகித விபத்துகளுக்கு காரணம் என்கிறார்கள் அங்கே உள்ள லாரி ஓட்டுனர்கள்.
தொப்பூர் பாலம் கட்டுமானம்
தொப்பூர் புதிய 3 வழி உயர்மட்ட மேம்பால சாலை பணிகள் சீராக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பாலத் தூண் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போதைய உயரம் 35 மீட்டர். விபத்தில்லா தொப்பூர் சாலை அமைப்பதே நமது விடாமுயற்சி, அதில் வெற்றி காண்பது நிச்சியம், என்று திமுக முன்னாள் எம்பி டாக்டர் டேந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
தொப்பூர் கணவாயில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக அமைக்கப்படும் உயர்மட்ட சாலையின் பணிகள் 50 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளன. அங்கே விபத்துகளை தவிர்க்க 6.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்கே உயர் மட்ட சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 905 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும்.
தொப்பூர் கணவாய் விபத்து: பிரச்சனைக்கு தீர்வு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொப்பூர் கணவாயில் அதிக அளவில் ஸ்பீட் பிரேக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வளைவுகளில் மெதுவாக செல்லும்படி ஸ்பீக்கர்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இங்கு 30 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்று தொடர்ந்து இந்த ஸ்பீக்கரில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த வருடம் விபத்துகள் 23 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கே elevated சாலை எனப்படும் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இங்கே தற்போது உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications