கமல் பேச்சைக் கேட்க ராமநாதபுரத்தில் திரண்ட லட்சம் பேர்!
கமல் பேச்சை கேட்க அலைக்கடலென திரண்டு வந்திருக்கும் மக்கள் வெள்ளம்.
Recommended Video

ராமராதபுரம்: கமல்ஹாசன் பேச்சை கேட்பதற்காக ராமநாதபுரத்தில் திரண்டு மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கின்றனர்.
கலாம் வீட்டில் இன்று அரசியல் பயணத்தை கமல் தொடங்கினார். அப்போது ரசிகர்கள் உள்பட வெகு சிலரே அங்கு திரண்டிருந்தனர்.
இதையடுத்து மீனவர்களை சந்தித்து கமல் உரையாடினார். அப்போது அவர் பேசிய பேச்சுகள் பெரும் வெளிவரத் தொடங்கியது.

கலாமுக்கு மரியாதை
இதைத் தொடர்ந்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல் மரியாதை செலுத்த சென்றார். அப்போது முதல் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. வழிநெடுகிலும் மக்கள் அலை அலையாக திரண்டவண்ணம் இருந்தனர்.

அரண்மனை முன்பு பேச்சு
அப்போது ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை முன்பு பேசுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அங்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

நட்சத்திரம்
அப்போது அவர் ரத்தின சுருக்கமாக கமல் பேசுகையில் ராமநாதபுரத்தில் என் சித்தப்பா ஆராவமுதன் இருந்தார். இன்னும் மக்கள் அதே அன்போடு இருக்கின்றனர். இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள். இனிமேல் நான் சினிமா நட்சத்திரம் அல்ல.. உங்கள் வீட்டு விளக்கு.

நீங்கள்தான் ஏற்ற வேண்டும்
என்னை பொத்தி பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அந்த விளக்கை நீங்கள்தான் ஏற்ற வேண்டும் என்றார் கமல். இதையடுத்து கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார். அங்கும் இதை விட ஏராளமான கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மக்கள் தலை
இன்று மாலை மதுரையில் கட்சியின் பெயரை கமல் அறிவிக்கும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு மாற்று ரஜினி, கமல் என்று நினைப்பதால் முதலில் முந்திக் கொண்ட கமலின் கொள்கைகளை கேட்க பொதுமக்கள் மட்டுமல்லாமல் தமிழகமே ஆர்வமாக உள்ளது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications