நாகூர் தர்கா சந்தனக்கூடு விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாகூர் தர்காவில் புனிதர் ஹஸரத் செய்யது ஷாஹுல் ஹமீது காதிர் அவர்கள் நல்லடக்கம் செய்யபட்டுள்ளார். அவரது நினைவாக நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Thousands witness Nagore Dargha Kandoori festival

இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாகூர் ஆண்வர் ஷரீப் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.

முன்னதாக சந்தனக் குடம் அடங்கிய கூடு நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சந்தனக்கூடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் வெளிமாநிலங்கள் மற்றும் மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர்.

சந்தனக்கூடு விழாவையொட்டி நாகூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+