For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிரட்டும் டெங்கு காய்ச்சல்.. இன்று காலையிலேயே அடுத்தடுத்து 5 பேர் பலி

டெங்கு காய்ச்சலால் இன்று காலையிலேயே அடுத்தடுத்து 3 மாணவிகள் மற்றும் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிகரிக்கும் டெங்கு உயிரிழப்புகள்-வீடியோ

    கரூர்: டெங்கு காய்ச்சலால் இன்று காலையிலேயே அடுத்தடுத்து 3 மாணவிகள் மற்றும் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் டெங்கு காய்ச்சல் குறைந்த பாடில்லை.

    டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் உயிரிழப்புகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை

    திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை

    கரூர் மாவட்டம் மணவாசி கிராமத்தைச் சேர்ந்த பூஜா என்ற சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

    மாணவி பூஜா பலி

    மாணவி பூஜா பலி

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பூஜா உயிரிழந்தார். பூஜாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    உடலுடன் சாலை மறியல்

    உடலுடன் சாலை மறியல்

    டெங்குவால் உயிரிழந்த சிறுமியின் உடலை கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வைத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    மாணவிக்கு வைரஸ் காய்ச்சல்

    மாணவிக்கு வைரஸ் காய்ச்சல்

    மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி மேனகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

    மாணவி உயிரிழப்பு

    மாணவி உயிரிழப்பு

    இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி மாணவி மேனகா உயிரிழந்தார். மாணவி உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

    லேப் டெக்னிஷியன் மாணவி உயிரிழப்பு

    லேப் டெக்னிஷியன் மாணவி உயிரிழப்பு

    மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு டெங்கு முகாமிற்கு வந்த லேப் டெக்னீஷியன் பயிற்சி மாணவி வினித்ரா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மாணவி வினித்ரா இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2 இளைஞர்கள் உயிரிப்பு

    2 இளைஞர்கள் உயிரிப்பு


    திருவண்ணாமலை அருகே 2 இளைஞர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். சு.கம்பப்பட்டியை சேர்ந்த மணிகண்டன், கெங்கம்பட்டி அராபத்
    உயிரிழந்துள்ளனர். மணிகண்டன் சென்னை அரசு மருத்துவமனையிலும் புதுவை ஜிப்மரில் அராபத்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    English summary
    Threatening dengue kills three girls and two youngsters in the morning itself. Karur. Madurai, Mettur girls and Thiruvannmalai younsters dead due to dengue fever.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X