9 இந்து முன்னணித் தலைவர்களைக் கொல்ல 27 பேர் நியமனம்.. மிரட்டல் கடிதம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று கடிதம் ஒன்று வந்தது. அதில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக போலீஸுக்குத் தகவல் போனது. கடிதம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாட்ஷா என்பவர் பெயரில் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது....
எனது பெயர் பாட்ஷா, நான் சில தீவிரவாத இயக்கங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவன். இந்து இயக்க நிர்வாகிகளை கொலை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் மேலும் 9 இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சென்னைக்கு இதற்காக 27 பேர் வந்துள்ளனர். இவர்கள் சென்னை, தாம்பரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் தங்கியுள்ளனர். இந்து இயக்கத் தலைவர்களைக் கடத்தி கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக தாம்பரத்தில் 4 பேரை பின்தொடர மட்டும் 5 பேர் தங்கியுள்ளனர். மேலும் இவர்கள் சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டு வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களுக்கு சில இயக்கத் தலைவர்கள் உதவி செய்து வருகின்றனர். இந்தக் கடித்ததை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications