திருச்சி திமுக மாநாட்டில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட 3 திமுக தொண்டர்கள் மரணம்!
திருச்சி: திமுக வரலாற்றில் சாதனை படைத்த திருச்சி மாநாட்டு வளாகத்திலேயே 3 தொண்டர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்ற திமுகவின் மாநில மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்திருந்தனர்.
இவர்களில் சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன் (வயது 70), தருமபுரி மாவட்டம் பாலக்கோர்டு ஸ்ரீகாரகூர் கிராமத்தை சேர்ந்த காமராஜ் (வயது 50), கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்த டி. கிருஷ்ணன் (வயது 55) ஆகியோர் மாநாட்டு வளாகத்திலேயே உயிரிழந்தனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியர் நடராஜன், மாநாட்டு பந்தலில் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மு.க. ஸ்டாலின், நேரு ஆகியோர் வளாகத்தில் இருந்த தற்காலிக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காமராஜ், கார் பார்க்கிங் பகுதியில் வாகனத்தில் அமர்ந்தபடியே தலைவர்கள் பேச்சைக் கேட்டு கொண்டிருந்தபடியே உயிரிழந்தார். கிருஷ்ணனும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மூவரது உடல்களையும் அவர்களது பகுதி கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைமை நிர்வாகிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications