நெல்லை அருகே அரசு பஸ் - லாரி மோதல்.. குழந்தை உட்பட 3 பேர் பலி
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
நெல்லையில் இருந்து அரசு பேருந்து ஒன்று புளியங்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஆலங்குளம் அருகே சீதபற்ப நல்லூரை அடுத்த புதூரை அருகே வந்தபோது கேரளாவில் இருந்து நெல்லைக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, அதி வேகமாக வந்து அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ் அப்பளமாக நொறுங்கியது.

இதில் ஒரு வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 17 பேர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.,விக்ரமன் தலைமையில் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். லாரி டிரைவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை நெல்லை கலெக்டர் கருணாகரன் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் நெல்லை-தென்காசி சாலையில் நேற்று இரவு 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications