2 பெண்கள், ஒரு ஆண் உள்பட 3 பேரை வெட்டி கொலை செய்த ஆண்டவர்
நெல்லை: திருநெல்வேலி அருகே உள்ள ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது நெட்டூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த சி லதினங்களுக்கு முன்பு நயினார் என்பவரது மகன் ஆண்டவர் என்ற முத்துராஜ் அப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் கோமதி என்ற மனநலம் பாதித்த பெண்ணை கடந்த 12 ந் தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது இதனைக் கண்ட முருகனின் மனைவி கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து ஆண்டவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் முருகன் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய முருகனின் மனைவி பேச்சியம்மாள், மகள் மாரியம்மாள், மாமனார் கோவிந்த சாமி ஆகியோரை ஆண்டவர் என்ற முத்துராஜ் இன்று மாலை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். தப்பியோடிய ஆண்டவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications