புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 3 சகோதரிகள் கடலில் குதித்து தற்கொலை
விழுப்புரம்: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் சிறு வயதில் முதல் இருந்து வந்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஹேமலதா, ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ மற்றும் நிவேதிதா ஆகிய 5 சகோதரிகள். அதில் ஹேமலதா மீது கடந்த 2002ம் ஆண்டு ஆசிரமம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. ஹேமலதா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் சகோதரிகள் ஆசிரமம் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். ஆனால் இது பொய் புகார் என ஆசிரமம் தெரிவித்தது.

இந்நிலையில் சகோதரிகளை வெளியேற்றுவது குறித்து ஆசிரமம் உயர் நீதிமன்றத்தை அணுகியது. உயர் நீதிமன்றம் சகோதரிகளை ஆசிரமத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சகோதரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சகோதரிகள் 5 பேரும் ஆறு மாத காலத்திற்குள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அதுவரை ஆசிரம விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நேற்றுடன் உச்ச நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்தது. ஆனால் சகோதரிகள் ஆசிரமத்தை விட்டு வெளியேற மறுத்தனர். இந்நிலையில் ஹேமலதா ஆசிரம குடியிருப்பின் 4வது மாடியில் நேற்று ஏறிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிரமத்திற்கு வந்தனர். அப்போது சப் இன்ஸ்பெக்டர் சஜீத் சாதாரண உடையில் நிருபர் போன்று சென்று ஹேமலதாவை காப்பாற்றினார். அதன் பிறகு அந்த 5 சகோதரிகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆசிரமத்தை விட்டு வெளியேறிய அவர்கள் குடும்பத்துடன் கடலில் குதித்தனர். இதில் அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ மற்றும் அவர்களின் தாய் பலியாகி அவர்களின் உடல்கள் விழுப்புரம் அருகே கரையில் ஒதுங்கியது. மீதமுள்ள 3 சகோதரிகள் மற்றும் தந்தையை காப்பாற்றியவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications