ஜெயலலிதா, ஸ்டாலின் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை எங்கே என்று தெரியுமா?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சென்னை ராணி மேரிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் லயோலா கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நேற்று சட்டசபைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 19ம் தேதி நேற்று பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

சென்னை தொகுதிகள்..
தமிழகத்திலேயே சென்னை மாவட்டத்தில்தான் அதிக அளவிலான தொகுதிகள் உள்ளன. அதாவது 16 தொகுதிகள் உள்ளன. இங்கு பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

3 இடங்கள்..
சென்னையில் ராணி மேரிக் கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ஜெயலலிதா தொகுதி..
ராணி மேரி கல்லூரியில் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

ஸ்டாலின் தொகுதி..
இதே போல லயோலா கல்லூரி மையத்தில் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தமிழிசை தொகுதி...
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை போட்டியிடும் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

3 அடுக்கு பாதுகாப்பு..
ஓட்டு எண்ணக்கூடிய 3 மையங்களிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெப் கேமரா மூலமும் தேர்தல் ஆணையம் இதனை கண்காணிக்கிறது. ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்களை இணைத்து கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

100 மீட்டருக்கு அப்பால்...
வாக்கு எண்ணும் பணி 19ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் இடத்திற்கு வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தாண்டிதான் கட்சி தொண்டர்கள் நிற்க அனுமதிக்கப்படுகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications