தம்பி வா.. தலைமை தாங்க வா.. ஸ்டாலினை பார்த்து கண் கலங்கிய துரைமுருகன்.. நிர்வாகிகளும் நெகிழ்ச்சி
திமுக பொதுக்குழுவில் துரை முருகன் மேடையில் பேசும்போது, உணர்ச்சிமயமானவராக காணப்பட்டார்.
திமுக பொதுக்குழுவில் துரை முருகன் மேடையில் பேசும்போது, உணர்ச்சிமயமானவராக காணப்பட்டார். "தம்பி வா.., தலைமை தாங்க வா.. உன் ஆணைக்கு கட்டுப்பட்டு நிற்கிறோம் இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்" என்று துரை முருகன் தெரிவித்தார். அப்போது கண்களில் கண்ணீர் வடிந்தது.
சென்னை: சென்னையில் அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்மொழிய, முதன்மை செயலாளர் துரைமுருகன் வழிமொழிய திமுக செயல் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் துரை முருகன் மேடையில் பேசும்போது, உணர்ச்சிமயமானவராக காணப்பட்டார். "திமுக பொதுச்செயலாளராக பதவியேற்குமாறு, நெடுஞ்செழியனை நோக்கி பேரறிஞர் அண்ணா "தம்பி வா, தலைமை ஏற்க வா.. உன் ஆணைக்கு கட்டுப்படுவேன்" என்று கூறினார்.
அந்த வார்த்தையை இரவல் வாங்கிக்கொண்டு, "தம்பி வா.., தலைமை தாங்க வா.. உன் ஆணைக்கு கட்டுப்பட்டு நிற்கிறோம் இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்" என்று துரை முருகன் தெரிவித்தார். அப்போது அவரது நா தழுதழுத்தது. கண்களில் கண்ணீர் வடிந்தது.
மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலினும் நெகிழ்ச்சியோடு காணப்பட்டார். ஆண் தொண்டர்களிலும் கூட சிலர் கண்ணீர் பெருக்கெடுத்தவர்களாய், கைக்குட்டையால் கண்களை துடைத்தவர்களாக காணப்பட்டனர்.












Click it and Unblock the Notifications