காட்டெருமை இறைச்சியில் விஷம் வைத்து புலியைக் கொன்ற மூவர் – வனத்துறையால் கைது
ஈரோடு: சத்தியமங்கலத்தில் காட்டெருமை இறைச்சியில் விஷம் வைத்து புலியை கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரம் பாலத்துறை வனப்பகுதியில் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவசுப்பிரமணியம், தலமலை வனச்சரக அலுவலர் ராமராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, காட்டுப்பகுதியில் புலியால் அடித்துக் கொல்லப்பட்ட காட்டெருமையின் உடல் கிடந்துள்ளது. அந்த காட்டெருமையின் இறைச்சியில் விஷ மருந்து கொட்டப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்தப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், ஒரு இடத்தில் தோல், பற்கள் மற்றும் நகங்கள் நீக்கப்பட்ட ஒரு புலியின் சடலம் புதைத்திருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, அந்தப்பகுதியில் ஆடு, மாடு மேய்போரிடம் விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், இட்டரை கிராமத்தைச் சேர்ந்த சொக்கன், பாலன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, காட்டெருமை இறைச்சியில் விஷம் வைத்து அவர்கள் புலியைக் கொன்றது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த வனத் துறையினர், அவர்களிடமிருந்து புலி நகங்கள் மற்றும் விஷப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications